” தலைநகர்,டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு முப்பது நிமிடங்களில் பயணம் “
” தலைநகர்,டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு முப்பது நிமிடங்களில் பயணம் ”
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இந்தப் பூமியில் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள் சென்றடையும் வகையிலான திட்டத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஸ்டார்ஷிப் விண்கலம் மூலம் பூமிக்கு மேல் உள்ள வான்பரப்பிலேயே பயணம் செல்லும் வகையில் இந்த அதிவேக பயணத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், விண்கலத்தில் ஆயிரம் பேர் வரை பயணம் செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அதிவேக பயணத் திட்டத்தின் மூலம், லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து டொரான்டோவுக்கு 24 நிமிடமும், லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 29 நிமிடமும், நியூயார்க்கில் இருந்து ஷாங்காய்க்கு 39 நிமிடங்களில் செல்ல முடியும் என்றும், நிச்சயம் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் எக்ஸ் தள பதிவுக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்