வடலூரில்வள்ளலார்நிறுவிய சத்திய ஞானசபையில், 154வது தைப்பூச ஜோதி தரிசன விழா, பல லட்சம் பேர்கள் ஜோதி தரிசனம்.
வடலூரில்வள்ளலார்நிறுவிய சத்திய ஞானசபையில், 154வது தைப்பூச ஜோதி தரிசன விழா, பல லட்சம் பேர்கள் ஜோதி தரிசனம்.
தமிழ் கடலூர் மாவட்டம்,மருதூரில் 19 ஆம் நூற்றாண்டில்1823 ஆண்டு, அக்டோபர் மாதம் 5ந்தேதி அவதரித்தார், (5.10.1823)இறைவன் ஒளி வடிவானவர் என உலகிற்கு உணர்த்தியவர், இவர் மருதூரில் பிறந்தவர், இருந்தாலும் சென்னை, சிதம்பரம், கருங்குழி, வடலூர் ஆகிய ஊர்களில் வாழ்ந்தார், இவர் பின்னர் வடலூர் மேட்டுக்குப்பம் சித்திவளாக திருவறையில் சித்தி பெற்றார்,இறைவன் ஒளி வடிவானவர் என்னை உலகிற்கு எடுத்துக் கூறினார் மக்கள் நாட்டில் பசி இன்றி வாழ வேண்டும், மது மாமிசங்களை தவிர்க்க வேண்டும், அதாவது உயிர் கொலை தவிர்த்தல் வேண்டும், மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும், சாதி, மத, சமய பழக்க வழங்களை எதிர்ப்பது என்பன உட்பட பல்வேறு சமூகப் புரட்சிகருத்துகளை வெளிப்படுத்தினார், இறைவன் ஒளிவடிவானவர், என்பதனை உலகிற்கு உணர்த்த வடலூரில்
ஞானசபையை நிறுவி அதில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்த அன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தைமாதம் வரும் பூச நட்சத்திரத்தை அன்று ஏழு திரைகளை நீக்கிய ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது, வழக்கம் பசி பிணியை போக்க, வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார் அதன் மூலம் தடையில்லா அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, இவர் நிரைவாக மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்,
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 154, ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது இதன் தொடக்கமாக பிப்ரவரி 3ந்தேதி முதல் பிப்ரவரி 5ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெறுகிறது.வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 154, ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது இதன் தொடக்கமாக பிப்ரவரி 3ந்தேதி முதல் பிப்ரவரி 5ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெறுகிறது.
பிப்ரவரி 6முதல் 9 ந்தேதிவரை ஞானசபையில் அருட்பா முற்றோதல் நடைபெறுகிறது.கொடியேற்றம்.
பிப்ரவரி 10ந்தேதி திங்கள் காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும்,7.30 மணிக்கு,வள்ளலார் பிறந்த மருதூர்,தண்ணீரால் விளக்கு
எரித்த’கருங்குழியிலும்.
வள்ளலார்சித்திபெற்ற
மேட்டுக்குப்பத்திலும்,
தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நிகழ்வு காலை 7 மணிக்கு நடைபெறுகிறது, தொடர்ந்துஞானசபையில் கொடிஏற்றம்காலை10மணிக்கும் நடைபெறுகிறது , இரவு தருமச்சாலைமேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெறுகிறது,
தைப்பூச விழாவின் சிகர நிகழ்ச்சி ஆன,ஜோதி தரிசனம்; பிப்ரவரி 11ந்தேதி செவ்வாய்க்கிழமை,தைப்பூச திருவிழா வையொட்டி,சத்திய ஞானசபையில் காலை6மணி,10மணி
பகல்1மணிஇரவு7மணி10 மணிக்குநடைபெறுகிறது,
மறுநாள் புதன்கிழமை
காலை5.30ஆக 6வது
காலம்,7திரைநீக்கிய
ஜோதிதரிசனம் நடைபெறுகிறது.
இதனைகாணதமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், பல லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு ஆண்டும் திரண்டு வருகை தருகின்றனர், மேலும் வழக்கம்போல். இதற்காக தமிழகத்தின்பலபகுதியில் சிறப்பு பேருந்துகள், ரயில்கள்
இயக்கப்பபடுகிறது, தைப்பூசவிழாவிற்கு , ஒருநாள் இடைவெளிக்கு பின்
பிப்ரவரி 13ந்தேதி வியாழக்கிழமை
பகல்12மணிமுதல்மாலை 6
மணிவரைமேட்டுக்குப்பத்தில் உள்ள,வள்ளலார்சித்திப்
பெற்ற திருஅறைதரிசனம்
நடைபெறுகிறது.முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன் படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியைட (பேழை) பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார்சித்திபெற்ற திரு
அறைஉள்ளமேட்டுக்குப்பம்கொண்டுசெல்லப்படும்.அங்குபக்தர்கள்வழிபாட்டுக்குபின்னமீண்டும்வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூசதிருவிழா வையொட்டிகொடியேற்றும் அன்று தருமச்சாலை மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு, இசை, நடனம், நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. மேலும் பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை,நிகழ்ச்சி.நாடகம் உள்ளிட்ட பல,கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாகடைகள் தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்படுவது வழக்கம்
அந்த கடைகளில் எவர்சில்வர்,அலுமினிய பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள்,
படக்கடைகள்,பழக்கடைகள் அவல் பொரி கடை , டெல்லி அப்பளம் கடைகள், பன்னீர் கரும்பு விற்பனை நடைபெறும்,
மக்கள் ஆர்வமுடன், பொருட்களை வாங்கி செல்வார்கள்,ஆனால் இந்த ஆண்டு ஞான சபையின் பெருவெளியில் கடைகள் அமைக்க அனுமதி இல்லை,
கடை வீதியில் சர்க்கஸ் கூடாரங்கள் நடன நாட்டிய அரங்குகள் சிறுவருக்கான ராட்டினம் தொடங்கி பிரம்மாண்ட கடைத்தெருக்கள் அமைக்கப்பட்டிருக்கும், ஞான சபையின் பெருவெளிக்கு வெளியே, இவைகள் அமைக்கபடலாம் என தெரிகிறது
தைப்பூச விழாவில் பல லட்சம் சன்மார்க்க அன்பர்கள் ஜோதி தரிசனம் செய்வார்கள்,
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செயல்அலுவலர் ராஜாசரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள்,வள்ளலார் தொடர்புடைய மருதூர், மேட்டுக்குப்பம், கருங்குழி ஆகிய கிராம மக்கள்செய்துவருகிறார்கள்.