“ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு”
“ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு”
திருமலை: ஆந்திர மாநில டிஜிபி ஆக இருந்த ராஜேந்திரநாத் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரைத் தேர்தல் முடியும் வரை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து மங்களகிரியில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஹரிஷ் குமார் குப்தா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.