கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பயனாளிகளுக்கு கடன் உதவி 803 நபர்களுக்கு 4 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் உதவி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார்
கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பயனாளிகளுக்கு கடன் உதவி 803 நபர்களுக்கு 4 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் உதவி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார்
கடலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பிரதம மந்திரி வீடு கட்டும் பயனாளிகளுக்கு கடன் உதவிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது :கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகள் இடுபொருட்களின் விலை உயர்வால் முழுமையாக வீடு கட்ட முடியாமல் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் அந்த பயனாளிகளுக்கு தலா 50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் 803 பயனாளிகளுக்கு 4 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது
செப்டம்பர் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
2023 – 2024 ம் ஆண்டிற்கான 244 சுய உதவி குழுவிற்கு ரூபாய் 11 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது என்று இவ்வாறு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்
பின்னர் பயனாளிகளுக்கு கடன் உதவி காசோலை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.