கம்மாபுரம் வட்டம் ஓட்டி மேடு, கிராமத்தில்,கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ சிறப்பு முகாம்
கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ஒட்டிமேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மதிமாலா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமினை பெருந்துறை கிராம ஊராட்சி தலைவர் லதா சந்திரசேகரன் துணை தலைவர் பாலகிருஷ்ணன் ஊராட்சி செயலாளர் சசிகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முகாமில் கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்ராஜ் அவர்கள் திட்ட விளக்க உரை ஆற்றினார்.கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் மூலம் பொது மருத்துவ அறுவை சிகிச்சை எலும்பு முறிவு சிகிச்சை பல் மருத்துவம் குழந்தை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பகால ஸ்கேன் பரிசோதனை ஊட்டச்சத்து குறித்து ஆலோசனைகள் ஆய்வக பரிசோதனை மூலம் ரத்தம் சிறுநீர் சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 கற்பிணிப் பெண் தாய்மார்களுக்கு ருபாய்2000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் மக்களை தேடி மருத்துவத் திட்டம் காசநோய் எய்ட்ஸ் டெங்கு காய்ச்சல் தொழுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.