அரியலூர் திமுக மருத்துவ அணி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
அரியலூர் திமுக மருத்துவ அணி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர், சா.சி.சிவசங்கர் அவர்களது வழிகாட்டுதலின் படி திமுக மருத்துவ அணி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் செந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் எஸ் சஞ்சய்குமார் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் எழில்மாறன்(வடக்கு), செல்வராஜ்(தெற்கு) ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.இம்முகாமில் சிறுநீரக மருத்துவர்,ரோகித், பொது மருத்துவர்கள் அபிஷேக், ஸ்வேத்தா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய், புற்றுநோய் கண்டறிதல், கண் பரிசோதனை, கண் புரை கண்டறிதல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட 186 நபர்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும்,20 நபர்களுக்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரையும் வழங்கப்பட்டது
இதில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியராஜ், கௌதம், மருத்துவ அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் ராமராஜன் மற்றும் பொதுமக்களும் கழக தோழர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வேல்முருகன்