காவிரி ஆற்றில் கத்தியுடன் தென்பட்ட மதுரை வீரன் சிலை; வைரலான வீடியோவால் பரபரப்பு!
திருச்சி மேலச்சிந்தாமணி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில் மூன்று அடி உயர கையில் அரிவாள் ஏந்திய மதுரைவீரன் சிலைதென்பட்டது. இதை கண்ட வாகன ஓட்டிகள் காவிரி பாலத்தில் நின்று சிலையை வேடிக்கை பார்க்க குவிந்தனர். சிலையின் வடிவமைப்பு புராண காலத்திய வடிவமைப்பை கொண்டுள்ளது.காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்த சமயத்தில் இந்த சிலை அடித்து வரப்பட்டதா? அல்லது இதில் வேறு ஏதும் ரகசியம் உள்ளதா? என்பது திருச்சி வாசிகளின் கேள்வியாக உள்ளது. சமூக வலைதளங்களிலும் மதுரை வீரன் சிலை வீடியோ பகிரப்பட்டு வருகிறது.சிலையை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.