வேலுார் அருகே குடியாத்தத்தில், அளந்த நிலத்திற்கு வரைபடம் கொடுக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமை நில அளவையர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அதே அலுவலகத்தில் நில அளவை பிரிவுக்கு பணியாற்றி வந்த தலைமை நில அளவையர் (சர்வேயர்) பள்ளிகொண்டாவை சேர்ந்த விஜய் கிருஷ்ணா, 47, தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நிலத்தை அளந்தனர். அதற்கான வரைபடத்தை தரவில்லை.
நில,வரைபடத்தை கேட்டதற்கு 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் வரைபடம் வரைந்து கொடுக்க முடியும் என்று விஜய் கிருஷ்ணா கூறிவிட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலு வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் 10 போலீசார் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவுக்கு சென்றனர்.அங்கு ரசாயன பவுடர் தடவிய 15 ஆயிரம் ரூபாயை வேலு கொடுத்த போது, தலைமை நில அளவையர் விஜய் கிருஷ்ணா வாங்கி அவரது தனிப்பட்ட உதவியாளர் குடியாத்தத்தை சேர்ந்த கலைவாணன், 27, என்பவரிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரும் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.