லால்குடி “அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு”
லால்குடி அருகே அன்பில் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் 87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஜீவிதா 483, ஜெயஸ்ரீ 476, ஆயிஷா பானு 451 முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவித்ரா அருண்காந்தி இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.துணைத் தலைவர் ராஜேஸ்வரி மாரியப்பன்,மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.