ஒரு மாதமாக அகற்றாமல் இருக்கும் சாக்கடை, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியம்
ஒரு மாதமாக அகற்றாமல் இருக்கும் சாக்கடை,
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியம்
குறிஞ்சிப்பாடி பகுதிகளில் பல்வேறு தெருக்களில் சரிவர கால்வாய்கள் அகற்றப்படாமல் இருப்பதால் ஆங்காங்கே கழிவுநீர்கள் தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்த வழிவகுக்கிறது. இதுபோன்று சிகாமணி ரைஸ் மில் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை அத்தெருக்களில் ஏற்படுத்தி வருகிறதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி மக்களுக்கு காய்ச்சல் தலைவலி வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தி வருகின்றன அதுபோல நேற்று குறிஞ்சிப்பாடி தாலுக்கா கல்குணம் கிராமத்தில் அரசுப் தொடக்கபள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி 5-வயது பெண் குழந்தை காய்ச்சலால் இறந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பேரூராட்சி பகுதிகளில் தெருக்களில் செல்லும் சாக்கடைக் கால்வாயில் கழிவு நீர்கள் தேங்கி நிற்பதால் இதன் மூலம் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர் மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி அனைத்து வார்டு பகுதியில் செல்லும் கால்வாய் பகுதிகளிலும் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்காமல் அகற்ற துப்புரவு பணியாளர்களை அதிகமாக நியமித்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட வேண்டும் என குறிஞ்சிப்பாடி பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.