பாமக கொடி கம்பத்தில் விசிக கொடி ஏற்றம்; பாமகவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் அருகே பாமக கொடிக் கம்பத்தில் விசிக கொடி ஏற்றப்பட்டு உள்ளது. இதனை அறிந்த பாமகவினர் சம்பவ இடத்தில் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *