குறிஞ்சிப்பாடியில் 20 வருடங்களாக சாலை வசதி மற்றும் கழிவு நீர் செல்ல கால்வாய் அமைக்காமல், காலம் தள்ளி போடும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம்
குறிஞ்சிப்பாடியில் 20 வருடங்களாக சாலை வசதி மற்றும் கழிவு நீர் செல்ல கால்வாய் அமைக்காமல், காலம் தள்ளி போடும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம்
வீட்டு வரி குடிநீர் இணைப்பு வரி அப்பகுதி மக்களிடம் வசூலிக்கும் பேரூராட்சி நிர்வாகம் ஏன் சாலை வசதி கழிவு நீர் காலவாய் ஏற்படுத்தித் தர பேரூராட்சி நிர்வாகம் 20-வருடமாக காலம் தள்ளிப்போடுகிறது. என கேள்வி எழுப்பும் அப்பகுதி மக்கள்
தற்போது இருக்கும் தமிழக முதலமைச்சர் முதல் தொகுதி அமைச்சர்கள் வரை பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை நடவடிக்கை இல்லை ஏன் ஏன் எனக் கேள்வி எழுப்பும் மக்கள்
குறிஞ்சிப்பாடி நகரப் பகுதியை எழில்மிகு குறிஞ்சிப்பாடியாக மாற்றி வரும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
முன்பு ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவினரிடம் மனு கொடுத்தும் அண்ணாநகர் வள்ளலார் தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் திமுகவினருக்கே வாக்களிப்பார்கள் என்பதால் அதிமுகவினரால் ஒதிக்கி வைக்கப்பட்டதாக கூறும் அப்பகுதி மக்கள்,தற்போது ஆளும் திமுகவினர் தேர்தலின் போது சாலை வசதி மற்றும் கழிவு கால்வாய் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தும் இது நாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை
ஒன்பதாவதுவார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டவர், நான் ஜெயித்தால் சாலை வசதியையும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தருவதாக கூறி வாக்குகளை பெற்று ஜெயித்து விட்டு வள்ளலார் தெரு பக்கம் திரும்பி பார்க்காமல் இருக்கும் திமுக வார்டு கவுன்சிலர்
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் ஒன்பதாவது வார்டு வள்ளலார் தெருவில் சுமார் 20 ஆண்டு காலமாக சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தராமல் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அதிகாரிபிடமும் முன்னாள் அமைச்சர் தொகுதியின் இந்நாள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவரிடமும் மற்றும் தமிழக முதல்வர் கோரிக்கை பிரிவிலும் பலமுறை மனு அளித்தும் இது நாள் வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் அனைவரும் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்பது அரசு விதிவிலக்குகள் இருந்தும் 20 ஆண்டுகளாக அண்ணாநகர் 9-வது வார்டு வள்ளலார் தெருவுக்கு மட்டும் சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியை செய்து தராமல் இருப்பது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அல்லது சாலையை அமைத்த மாதிரி நிதியை ஆட்டையை போட்டு இருப்பார்களோ என சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சட்ட ரீதியாக செல்லவும் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆகையால் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் குறிஞ்சிப்பாடி நகரப் பகுதிகளை எழில்மிகு தோற்றத்துடன் அழகுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் அமைச்சர் அவர்கள் அண்ணா நகர் ஒன்பதாவது வார்டு வள்ளலார் தெருவிற்கு சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய்யையும் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். செய்வார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் ஒன்பதாவது வார்டு வள்ளலார் தெரு பகுதி மக்கள்.கோரிக்கை நிறைவேறுமா?