“தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு, நீதிமன்றம் மறுப்பு”
தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தொடரப்பட்டது. ஆனால் அதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.