அரியலூர் மாவட்ட ஈஷா நாற்றுப்பண்ணையினை எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்
அரியலூர் மாவட்ட ஈஷா நாற்றுப்பண்ணையினை எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மூர்த்தியான் கிராமத்தில் அரியலூர் மாவட்ட ஈஷா நாற்றுப்பண்ணையினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்பித்தார்,அதில் எம் எல் ஏ பேசியதாவது, சரவணன் அவர்கள் மிகச் சிறப்பாக நாற்றுப் பண்ணையினை துவக்கிஉள்ளார், அவரின் முயற்சிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், தெரிவித்துக் கொள்கிறேன், இயற்கை உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ விவசாயிகள், பொது மக்கள் முன்வர வேண்டும் , அனைவரும் தங்களது வீடுகளில் நாட்டு மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும், நாம் அனைவரும் பசுமையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பனையின் பயனைப் பற்றி எடுத்துரைத்தார், இயற்கை போற்றுவோம் மீண்டும் இயற்கைக்கு மாறுவோம் என கேட்டுக்கொண்டு மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தார்,முன்னதாக காவேரி கூக்குரல் அரியலூர் மாவட்டம் பொறுப்பாளர் எஸ் புவனேஸ்வரி சரவணன் வரவேற்புரை நல்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிவா புட்ஸ், பா.ஜ.க மாவட்ட பொருளாளர் சிவகுமார்,எம் ஆர் கல்லூரி தாளாளர் ரகுநாதன், வேளாண் அறிவியல் மையசேர்மன் நடன சபாபதி பிஎஸ்பி மண்டல ஒருங்கிணைப்பாளர் நீலமேகம், அரசினர் காமராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் தம்பிதுரை, உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், தமிழ் பாரம்பரிய இயற்கை வாழ்வியல் நிபுணர் இயற்கை ரவி, தமிழ் பாரம்பரிய மரபு வழி வேளாண் விஞ்ஞானி புதுக்கோட்டை சின்னையா நடேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இயற்கை சார்ந்த விவசாயம் மற்றும் பொருளாதாரம் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதனையும் எடுத்துரைத்தனர் . நிறைவாக அரியலூர் மாவட்ட ஈஷா நாற்றுப்பண்ணை பொறுப்பாளர் சரவணன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி நன்றி தெரிவித்தார்…
அரியலூர் மாவட்டம்
செய்தியாளர் வேல்முருகன்