“சச்சினின் 30 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு”.. 20 வயது இந்திய கிரிக்கெட் வீராங்கனை அசத்தல்
மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது. ஆடவர் டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் மகளிருக்கான டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது.இந்த தொடரில் டாப் 10 மகளிர் அணிகள் பங்கேற்கிறது. 23 போட்டிகள் மொத்தமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய மகளிர் அணி தொடர்ந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை சிபாலி வர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார். அதாவது 20 வயதான சிபாலி வர்மா, இதுவரை இந்திய அணிக்காக நான்கு சர்வதேச டெஸ்ட் ,23 சர்வதேச ஒரு நாள் மற்றும் 78 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இருக்கிறார்.இதில் சிஃபாலி வர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 338 ரன்களும், ஒரு நாள் போட்டியில் 536 ரன்களும், டி20 போட்டியில் 173 ரன்களும் அடித்திருக்கிறார். இதன் மூலம் சிபாலி வர்மா, நூறாவது சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டு கால சாதனையினை சிபாலி வர்மா முறியடித்திருக்கிறார்.இளம் வயதில் 100 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமை தற்போது சிபாலி வர்மாவுக்கு சொந்தமாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் 20 வயதில் 329 நாட்களில் தன்னுடைய நூறாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியை 1994 ஆம் ஆண்டு விளையாட்டினார். தற்போது சிபாலி வர்மா தன்னுடைய 20 வயதில் 102 நாட்களில் நூறாவது சர்வதேச போட்டியில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிபாலியின் இந்த சாதனை மகளிர் கிரிக்கெட்டுக்கு இதுவே முதல் முறையாகும்.