இந்தியாவின் பகுதிகளுக்கு பெயரை மாற்றிய சீனா
அருணாச்சல பிரதேசத்தின் 11 பகுதிகளுக்கு சீனா பெயரை மாற்றி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2017, 2021ல் இதே போன்ற நடவடிக்கைகளை சீனா செய்திருந்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்தியாவின் பகுதிகளுக்கு பெயரை மாற்றிய சீனாவிற்கு கண்டனங்கள் வலுத்துள்ளது.
மலைகள், ஏரிகள் மற்றும் மக்கள் வசிக்கும் 11 பகுதிகளின் பெயரை மாற்றி அவற்றை தெற்கு திபெத் என சீனா குறிப்பிட்டுள்ளது.