உத்திரபிரதேசத்தில்,தாதா சகோதரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மூன்று பேர் கொண்ட குழு அமைத்து இரட்டைக் கொலை குறித்து விசாரிக்க உத்தரவு.
உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி அதிக் அஹமது மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி பிரக்யாராஜ் நகரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அப்போது இருவர் மீதும் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்; துப்பாக்கியால் சுட்டதாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிக் அஹமது, அஷ்ரப் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, இருவரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரக்யாராஜ் நகர் முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது ஏ.என்.ஐ., பத்திரிக்கையாளர் ஒருவரும், போலீசாரும் காயம் அடைந்தனர்.
பத்திரிகையாளர்களாக வந்த கொலையாளிகள்”
நடந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் அதிக் அஹமது, அஷ்ரப்பை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தோம்.அப்போது பத்திரிகையாளர்களுடன் சிலர் வந்திருந்தனர். அவர்கள் தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்தியுள்ளனர் என்றார்.,
அட்டீக் அகமது கொலை சம்பவத்தில் அட்டீக் அகமதுக்கு பாதுகாப்பு இருந்த 17 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்.
மூன்று பேர் கொண்ட குழு அமைத்து இரட்டைக் கொலை குறித்து விசாரிக்க உத்தரவு.