சகோதரனுடன் தகாத உறவு; சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் மறுப்பு!
கேரளாவில் 12 வயது சிறுமியின் 34 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்கக் கோரி அவரது பெற்றோர் நீதி மன்றத்தை அணுகினர். 18 வயதை கூட பூர்த்தி செய்யாத தனது சகோதரருடன், பாலியல் உறவில் ஈடுபட்டதால், 12 வயது சிறுமி கர்ப்பமானது குறிப்பிடத்தக்கது. கருவுற்ற சிறுமிக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், கருவை கலைக்க சிறுமியின் பெற்றோர் அனுமதி கோரி வாதிட்டனர். முதலில் சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு, கருவை கலைக்கலாம் என மருத்துவ குழு பரிந்துரை செய்தது. ஆனால், மருத்துவக் குழுவின் அறிக்கைகள் போதுமானதாக இல்லாததால், சிறுமி மற்றும் கருவை மறுமதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், கர்ப்பத்தை தொடர்வது சிறுமிக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம் சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்துள்ளது.