அரசு பள்ளிகளுக்கு வழங்குகிற சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்!
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு கவன ஈா்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அரசாணை 243-ஐ திரும்ப பெற வேண்டும். பதவி உயா்வு பழைய நடைமுறையில் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு வழங்குகிற சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோாிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.