“சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையில் மே 15- ஆம் தேதி மாற்றம்”
“சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையில் மே 15- ஆம் தேதி மாற்றம்”
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20607/20608) மே 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் வழக்கம் போல் காலை 5.50 மணிக்கு புறப்படும்.
இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல் காலை 7.21 மணிக்கு வருவதற்கு பதிலாக 8 நிமிஷங்கள் முன்கூட்டியே வரும். அதேபோல், காலை 7.25 மணிக்கு, பதிலாக 10 நிமிஷங்கள் முன்பாக 7.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
மேலும், மறுமாா்க்கமாக மைசூரில் இருந்து காட்பாடிக்கு வழக்கம்போல் மாலை 5.36 மணிக்கு பதிலாக மாலை 5.33 மணிக்கு வந்தடையும். மாலை 5.40 மணிக்கு பதிலாக 5 நிமிஷங்கள் முன்பாக 5.35 மணிக்கு புறப்படும்.
அதேபோல், சென்ட்ரலுக்கு வழக்கம்போல் இரவு 7.30 மணிக்கு வந்தடைவதற்கு பதிலாக 10 நிமிஷங்கள் முன்பாக இரவு 7.20 மணிக்கு வந்தடையும்.
ஹவுரா ரயில் சேவையிலும் மாற்றம்:
சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12840) மே 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கமாக இரவு 7.15 மணிக்கு செல்வதற்கு பதிலாக 5 நிமிஷங்கள் தாமதமாக இரவு 7.20 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது