இந்தியாவை பின்பற்றி பிரான்ஸ்!
எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. பல்வேறு வங்கி கணக்குகளை ஒரே செயலி மூலம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த இயலுமென்பதால், யு.பி.ஐ. முறை வெற்றிகரமாக சென்று சேர்ந்துள்ளது. கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோனுக்கு, ராஜஸ்தானில் கடைவீதியில் க்யூஆர் கோடுமுறையும் , யு.பி.ஐ. பண பரிவர்த்தனை முறையும் பிரதமர் மோடி விளக்கினார்.இதை அப்படியே பிரான்ஸ் நாடும் பயன்படுத்த துவங்கியுள்ளது. இதற்கான துவக்க விழா பாரிஸ் நகரில் இந்திய தூதரகத்தில் நடந்தது. முதற்கட்டமாக ஈபிள் கோபுரம் பகுதியில் யு.பி.ஐ., சேவை துவங்கியது.