அசாமில் 11,304 கலைஞர்கள், 2,548 துலியாக்களுடன் நடந்த நாட்டுபுற நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் உள்ள சுர்சாய் ஸ்டேடியத்தில் மெகா பிஹு (அசாமின் நாட்டுப்புற நடனம்) நிகழ்ச்சி, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடந்தது. மொத்தம் 11,304 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த பிரமாண்ட நாட்டுப்பு நடனத்தில், 2,548 துலியாக்கள் (டிரம் வாசிப்பவர்கள்) நடனக் குழுவினருடன் சேர்ந்து ஒன்றாக டிரம்ஸ் வாசித்து அசத்தினர். முந்தைய உலக சாதனையான 1,356 டிரம்ஸை, இந்த குழுவினர் முறியடித்தனர்.
உலக சாதனையாக பார்க்கப்படும் இந்த நாட்டுப்புற நடனத்தை கின்னஸ் உலக சாதனை தலைமையகத்தின் லண்டன் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களும், 2,500க்கும் மேற்பட்ட துலியாவும் (டிரம்மர்கள்) ஒன்றாக சேர்ந்து ஒரே இடத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பிஹு நிகழ்ச்சியாக கருதப்படுவதால், இந்த நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் பார்வையாளர்கள் கூறினர்.