ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், இளமறிவியல் கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறைகளைச் சார்ந்த ஒவ்வொரு துறை மாணவ-மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் கல்லூரி முதல்வர் க.இரமேஷ் பங்கேற்று அனைத்து துறை பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாணவ-மாணவிகள் பொங்கலோ பொங்கல் என ஆரவாரமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவ-மாணவிகள் தமிழர் கலாச்சாரத்தின் பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினர்.