25 ஆயிரம் பேருக்கான ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி!
தமிழ்நாடு இளைஞர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்கும் வண்ணம், பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – சீர்மரபினர் – ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் 25 ஆயிரம் பேருக்கான ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சியை சென்னை கலைவானர் அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், திறன் பயிற்சி பெற்ற தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய
குடியிருப்புகளைச் சேர்ந்த 442 இளைஞர்கள் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சி பெற்ற 7,908 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறை ரீதியான அரசு அதிகாரிகள், மாணவ- மாணவியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.