அரசு பழங்குடியினர் பள்ளிகளில் 38,800 காலியிடங்கள்
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை விதிமுறைகளை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது.
பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275(1)-ன் கீழ்மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.
மேற்கூறிய மக்கள் எண்ணிக்கை அடிப்படையில், நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.
இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.