வடலூர்,எஸ் .டி .ஈடன் பள்ளி 100 சத வீத தேர்ச்சி, மாணவிகள் சாதனை
வடலூர்,எஸ் .டி .ஈடன் பள்ளி 100 சத வீத தேர்ச்சி,
கடலூர்மாவட்டம்,வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
வடலூரில் 40 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 285 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில்
75 பேர் 500 மதிப்பெண்களுக்கு
மேலும், 550க்கு மேல் 25 பேரும், 570க்கு மேல் 7, மாணவர்களும் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி கோபிகா 586 மதிப்பெண்களும்,மாணவி ஈஸ்வரி 579, மதிப்பெண்களும்,மாணவி சாஜிதா 575
மதிப்பெண்களுடன் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை, பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், மற்றும் நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ்,ஆகியோர் பாராட்டி வாழ்த்துதெரிவித்தனர்.