விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், பாராளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து,விருத்தாசலத்தில் ரயில் மறியல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி பாராளுமன்றம் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து,விருத்தாசலத்தில் ரயில் மறியல் போராட்டம்
புதுடெல்லி.பாராளுமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்த இளைஞர்கள் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, கார்த்திக் சிதம்பரம், உள்ளிட்ட 49 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, விருத்தாச்சலம் ரயில் நிலையம் அருகே உள்ள நாச்சியார் பேட்டை ரயில்வே கேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று திரண்டு,
திருச்சியில் இருந்து அவுரா செல்லும் அவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் மற்றும் விருத்தாச்சலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.