பழனி முருகன் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம், தங்க பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், நகைகள் எண்ணப்படுகிறது. அதன்படி பழனி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்களாக காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையின் மூலம் ரூ.3 கோடியே 84 லட்சத்து 12 ஆயிரத்து 668 வசூலாகி உள்ளது. தங்கம் 696 கிராம், வெள்ளி 14¾ கிலோ (14,883), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 880-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.