கடலூரில்தமிழ்நாடு ஆளுநர் இரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ் நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம்
கடலூரில்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் இரவியை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ் நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கடலூர் மாவட்டத் துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கடலூர் மாநகரச்செயலாளர்
ஏழுமலை, ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரிதிவிராஜன், செம்மங்குப்பம் செயலாளர் சுமதி, சி.என்.பாளையம் செயலாளர் வசந்தா, தமிழ்நாடு புரட்சிகர இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் டேவிட் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் சி.கலியமூர்த்தி, மாநிலத் தலைவர் சம்பந்தம், மாநில செயற்குழுஉறுப்பினர் அறவாழி, மாவட்ட செயலாளர்
இராமச்சந்திரன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் சுந்தர்ராஜாஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.