“இறந்த கணவரின் உயிரணு” மூலம் குழந்தை பெற பாட்டிக்கு கோர்ட்டு அனுமதி!!!
ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் வசிக்கும் முதிய தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அவர்கள் உயிரிழந்த நிலையில் அந்த தம்பதியினர் செயற்கை கருத்தரிப்பு முறையில் மற்றொரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் டிசம்பர் அந்த பெண்ணின் கணவரும் உயிரிழந்தார். இறந்த இரு நாட்களுக்குள் உயிரணுவை சேகரிக்க வேண்டும் என்பதால் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுத்ததால் கணவரின் உயிரணு சேமித்து வைக்கப்பட்டது. ஆனால் அதனை பயன்படுத்த தனி நீதிபதியின் உத்தரவு வேண்டும் என்பதால் தனியே மற்றொரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கிலும் கோர்ட்டு அவருக்கு அனுமதி வழங்கியது. இதன் மூலம் உயிரிழந்த கணவரின் உயிரணுவை பயன்படுத்தி குழந்தை பெறுவதற்கான சட்ட போராட்டத்தில் அந்த 62 வயது பாட்டி வெற்றி பெற்றுள்ளார்.