நாட்டின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம்
இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் மகாராஷ்டிராவில் உள்ளது. நவி மும்பையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நீதிமன்றத்தை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கௌதம் படேல் திறந்து வைத்தார்.
அப்போது, இனி காகிதங்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். மேலும், இதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்களை, அவர்களால்தான் நாட்டிலேயே முதல் டிஜிட்டல் நீதிமன்றம் உருவாகியுள்ளது என்று பாராட்டினார்.