பன்னிரண்டாயிரம் இந்திய இணையதளங்களை முடக்க சதி.
இந்திய இணையதளங்களை முடக்க சதி.
உஷாராகி இருக்கும்படி மாநிலங்களுக்கு அட்வைஸ்.
புதுடில்லி: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த, ‘ஹேக்கர்கள்’ எனப்படும்.
சட்ட விரோத இணைய ஊடுருவல்காரர்கள், நம் நாட்டின் மத்திய மற்றும் மாநில அமைச்சகங்களின் இணையதளங்கள் உள்ளிட்ட 12 ஆயிரம் அரசு இணையதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மத்திய மற்றும் மாநில அரசுகளின், 12 ஆயிரம் இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்த, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனே ஷியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் கும்பல் குறிவைத்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பதிலளிமுன்அனுப்பு
|