சுரங்க திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தித் தருவதை தமிழக அரசு கைவிடவேண்டும்” என் தமிழக அரசையும் என்எல்சி நிறுவனத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சுரங்க திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தித் தருவதை தமிழக அரசு கைவிடவேண்டும்” என் தமிழக அரசையும் என்எல்சி நிறுவனத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
கடலூர், மாவட்டம்
வடலூரில் புரட்சிகர சோசலிஸ்ட்
கட்சியுடன், தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியை இணைக்கும் இணைப்பு மாநாடு வடலூரில் மாவட்டசம்பந்தம் தலைமையில் நடைபெற்றது.புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜீவானந்தம், மத்தியக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எம்.ஜி.ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார்.மத்திய செயற்குழு உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன், கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். புரட்சிகர இளைஞர் முன்னணியின் அகில இந்திய தலைவர் கொராணிசிபு, மாநில செயலாளர் ஆ.ஜீவானந்தம், மத்தியக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம், சி.கலியமூர்த்தி, க .அறவாழி,பட்டுசாமி ஆகியோர் உரையாற்றினர் பா.அருள்பிரகாசம் நன்றி கூறினார்.கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*விலைவாசி உயர்வுக்கு எதிராக,
அத்தியாவசியப் பண்டங்களின் வரலாறு காணாத விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்க்கை நெருக்கடியில் சிக்கி அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.பண்டங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய பாஜக ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன் போர்க்கால அடிப்படையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கத்திற்கு எதிராக:
நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் கடலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் வெகுவாகப்பாதிக்கப்பட்டு மக்கள் வாழ இயலாத நிலையில் உள்ளது.மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் இரண்டாவது சுரங்கத்தை விரிவுப் படுத்தவும், மூன்றாவது சுரங்கம் அமைக்கவும் மேலும் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த என் எல் சி இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.தமிழக அரசும் என்எல்சி நிறுவனத்தின் திட்டத்திற்கு ஆதரவாக தேவையான நிலங்களை கையகப்படுத்தி ஒப்படைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.மின்சார தேவைக்காக விளைநிலங்களை அழிப்பது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பாகும்.எனவே என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கங்களை விரிவு படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.மேற்படி திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தித் தருவதை தமிழக அரசு கைவிடவேண்டும்” என் தமிழக அரசையும் என்எல்சி நிறுவனத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
*என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.என்எல்சி இந்தியா நிறுவனம் தொழிலாளர்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் புறக்கணித்து வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு என்எல்சி இந்தியா நிறுவனத்தைக் கேட்டுக்கொள்வதுடன், உடனடியாகத் தலையிட்டு பிரச்சினைகளை முடித்து வைக்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* திணிப்பு முயற்சியைக் கண்டித்து.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில் மூன்று புதிய மசோதாக்களை பெயர் மாற்றங்களோடு தாக்கல் செய்துள்ளார்.இது இந்திபேசாத மக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை நிற்கும் முயற்சி யாதும்.அப்பட்டமாக இந்தியைத் திணிக்கும் முயற்சியாகும்.ஒன்றிய அரசின் மேற்படி நடவடிக்கையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்திபேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்