காதலிப்பதாக கூறி கட்டாய உல்லாசம்; போலீஸ் நிலையத்தில் அமர்ந்து இளம் பெண் தர்ணா!

திருச்சி மாவட்டம் பனையபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21-ந்தேதி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒருபுகார் அளித்தார். அதில், நான் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 3ம்ஆண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் கடந்த மே மாதம் எனது தந்தை இறந்தார். அப்போது என்னுடன் கல்லூரியில் படிக்கும் திருவளர்சோலை பகுதியை சேர்ந்த பாலாஜி(19) எனக்கு ஆறுதல் கூறினார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கினோம். இந்நிலையில் பாலாஜி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்தார். இதனால் நான் கார்ப்பம் ஆனேன். இதுகுறித்து பாலஜியிடம் நான் தெரிவித்த போது குழந்தையை கலைக்க சொல்லி வற்புறுத்தினார். நான் மறுக்கவே என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தி கொண்டார். இந்நிலையில் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே என்னை ஏமாற்றிய பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த பெண் தனது புகார் மீது கடந்த 2 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் நேற்று ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு வந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய உதவி ஆணையர் நிவேதா லெட்சுமி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial