கட்டுமான தொழிலாளர்களின் பண பலன்களை வழங்க தாமதப்படுத்தும் நல வாரிய துறையை கண்டித்து.சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்.
சேலம் ஜூலை -18 கட்டுமான தொழிலாளர்களின் பண பலன்களை வழங்க தாமதப்படுத்தும் நல வாரிய துறையை கண்டித்து.
சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்.
தொழிலாளர்களின் பண பலன்களை வழங்க தாமதப்படுத்தும் நல வாரிய துறையை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியத் துறை கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது எதிராக செயல்படுவது போன்ற தோன்றத்தை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக ஓய்வூதியம் 60 வயது பூர்த்தியான நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் வழங்குதல். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம், ஓய்வு பெறும் தொழிலாளி இறந்து போனால் இயற்கை மரண உதவி, ஈமச்சடங்கு நிதி உதவி உள்ளிட்டவைகளை கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அரசின் நலத்திட்டங்கள் தொழிலாளர்களுக்கு முறையாக சென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது, மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் பிரதி மாதம் 10ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் திருமண உதவி, வீடு கட்டும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும், எளிமையாக்க வேண்டும், தேங்கியுள்ள கட்டுமான தொழிலாளர்களின் விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலனை செய்து பண பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
சங்கத்தின் தலைவர் சி. மயில்வேலன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார் மாவட்ட செயலாளர் எ.கோவிந்தன் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் ஆர். வெங்கடாபதி கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி. கருப்பண்ணன் மாநில துணைத்தலைவர் சி. மோகன் உள்ளிட்டு சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.