அதிரடி ஆய்வில் சிக்கிய போலி பாராமெடிக்கல் கல்லூரி!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வெள்ளாளர் தெருவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் தலைமையில் குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் செங்குந்தபுரம் ஆறாவது வார்டை சேர்ந்த கொளஞ்சி என்பவர் நடத்தி வந்த அன்னை மாதா நர்சிங் கல்லூரி முறையான அங்கீகாரம் பெறாமல் மருத்துவத் துறையில் அனுமதி பெறாமல் கல்லூரி நடைபெற்று வருவதாக மாவட்ட மருத்துவ இயக்குனர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்ததின் அடிப்படையில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். இதில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் AMET நர்சிங் கல்லூரியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டதில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் இந்திய நர்சிங் கவுன்சில் ஆகியவற்றின் அனுமதியின்றி ஜெயங்கொண்டத்தில் AMET அன்னை மாதா நர்சிங் கல்லூரி நடைபெற்று வருவதை உறுதி செய்தனர். இந்த ஆய்வு குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்ததாவது:- ஜெயங்கொண்டத்தில் கொளஞ்சி என்பவரால் நடத்தப்பட்டு வந்த AMET நர்சிங் கல்லூரி மத்திய மாநில அரசுகளின் முழுமையான அனுமதி பெறாமலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் நடத்தி வந்தது தெரிய வந்தது, மேலும் 40 மாணவிகள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத இரண்டு வருட கால படிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தெரியவந்தது மேலும் இதனை நடத்தி வந்த கொளஞ்சி என்பவர் தகவல் தெரிந்து நர்சிங் கல்லூரியை விட்டு முன்பாகவே வெளியே சென்று விட்டார் பணிபுரிந்த நபரிடம் விசாரணை செய்தபோது ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது இதுகுறித்து 2023 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகமலும் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர்,மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகள் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளை கண்டறிந்து படிப்பினை தொடருமாறு கேட்டுக் கொண்டார். இதில் ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார் அளித்து விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.