வன்னியர் சங்கத்தின் 44 வது ஆண்டு துவக்க விழா – க.வைத்தி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
வன்னியர் சங்கத்தின் 44 வது ஆண்டு துவக்க விழா – க.வைத்தி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
21.07.2021 அரியலூர் ,
வன்னியர் சங்கம் துவங்கப்பட்டு 43 ஆண்டுகள் கடந்த நிலையில் வன்னியர் சங்கத்தின் 44 துவக்க விழாவை முன்னிட்டு தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் அதேபோல் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார் தமிழகம் முழுவதும் வன்னியர் சங்க 44 வது ஆண்டு துவங்க விழாவை அதன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாடி வரும் நிலையில்.
அரியலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி மற்றும் பாமக மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் அரியலூர் , ஜெயங்கொண்டம், ரெட்டிபாளையம், சின்ன வளையம், பெரியவளையம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்னியர் சங்க கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி 45 வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடினர் .
இதில் அரியலூர் ஜெயங்கொண்டம் ரெட்டிபாளையம் சின்ன வளையம் பெரியவளையம் தா பழூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்னியர் சங்க கொடி ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் தர்ம பிரகாஷ் மூத்த நிர்வாகி மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் கே ஆர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் செம்மலை கலியபெருமாள் ஆச்சி இளங்கோவன் பனையடி கொளஞ்சி நகர்மன்ற உறுப்பினர் ரங்கநாதன் ஜோதிமணி சுதாகர் மாதவன் மற்றும் வன்னியர் சங்க பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக பாமக நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.
செய்தியாளர்.D. வேல்முருகன்