செதலவாடி “பொன்னிஞ்சி ஆண்டவர்” கோவில் கும்பாபிஷேகம்!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே செதலவாடி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூர்ண புஷ்ப கலா சமேத பொன்னிஞ்சி ஆண்டவர் கோவில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். தற்போது கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் காவல் தெய்வங்களான ஸ்ரீ செம்மலையப்பா, ஸ்ரீ கொன்னையடடி கருப்பு, ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ கொப்பாட்டி அம்மன், ஸ்ரீ ஆகாச கருப்பு உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. ஸ்ரீ பூரண புஷ்பகலா சமய ஸ்ரீ பொன்னிஞ்சி ஆண்டவர் ஆலயத்தில் சிவாச்சாரியர்களால் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் புனித நீர் கூடி இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு ஊர் பொதுமக்கள் சார்பாக விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.