தென்பெண்ணை ஆற்றில் ராசாயணம் கலப்பத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தென்பெண்ணை ஆற்றில் ராசாயணம் கலப்பத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. மாநில செயற்குழு உறுப்பினர்,டாக்டர் சரவணன் அறிக்கை
தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு தொழிற்சாலைகளின் ராசாயன கழிவு கலக்கப்படுவதால் பாசனம் பெரும் விலை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் துன்பப்படுகின்றனர்………
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தென்பெண்ணை ஆற்றில் ராசாயணம் கலப்பத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தின் இல்லை மாநிலமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டம் வழியாக தென்பெண்ணை ஆறு கடந்து செல்கிறது.
ஓசூர் கெளவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, திருவண்ணாமலை சாத்தனூர் ஆகிய மூன்று அணைகளை உள்ளடக்கி இந்த ஆறு கடலூரில் சென்று நிறைவு அடைகிறது.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ராசாயண கழிவுகள் கலக்கப்படுவதால் தண்ணீர் மாசுபாடுவதுடன் நுரை பொங்கி செல்கிறது.
இதன் காரணமாக கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாசனம் வசதி பெரும் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது , பயிர்களில் பல்வேறு நோய் பரவி விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்கள் தலையிட்டு தென்பெண்ணை ஆற்றில் ரசாயணம் கலப்பதை தடுத்து நிறுத்தி விலை நிலங்களையும் விவசாயிகளையும் காக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து கர்நாடக மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்க்கு நிரந்தர தீர்வு கானவேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்