அரியலூர் -தனது சிறு வயது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் கனவை நினைவாக்கிய மகனின் செயலுக்கு தாய்,தந்தை பொருமிதம்.
அரியலூர் -தனது சிறு வயது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் கனவை நினைவாக்கிய மகனின் செயலுக்கு தாய்,தந்தை பொருமிதம்.
1.08.2023, அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பநாயகன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56 இல் 7 ராக்கெட்டுகள் விண்வெளியில் செலுத்தப்பட்டது.
அதில் மூன்று ராக்கெட்டுகளை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யப்பநாயக பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சண்முகசுந்தரம் தந்தை செல்வதுரை, தாய் அறிவழகி கூறுகையில் எனது மகன் சிறுவயதில் இருந்தே ராக்கெட் விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். ஆகையால் படிப்பதிலும் ஆர்வத்துடன் படித்தார். இதன் மூலம் சென்னை இந்துஸ்தான் யுனிவர்சிட்டியில் ஏரோனாட்டிக் இன்ஜினியரிங் பயின்றார். இதனைத்தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இது குறித்து பயிற்சி பெற்றார்.
இந்நிலையில் அவர் தயாரித்த செயற்கை கோள் வின்னில் செலுத்தப்பட்டது.இதன் மூலம் அவரது சிறு வயது கனவை நினைவாக்கினார். இது எங்களுக்கு மட்டும் இன்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக என தாய், தந்தை பொருமிதம் தெரிவித்தனர்.
சண்முக சுந்தரத்தின் தாய் தந்தை விவசாய வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்