அரியலூர் – மாளிகைமேடு 3 ஆம் கட்ட அகழ்வாராட்சியில் பதினோராம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சீன பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு, சுடு மண்ணால் ஆன முத்திரை தரவு கண்டெடுப்பு.
அரியலூர் – மாளிகைமேடு 3 ஆம் கட்ட அகழ்வாராட்சியில் பதினோராம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சீன பானை ஓடு, காசு வார்க்கும் அச்சு, சுடு மண்ணால் ஆன முத்திரை தரவு கண்டெடுப்பு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் சோழர்கள் வாழ்ந்த அரண்மனை பகுதி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. தற்பொழுது தமிழக அரசின் உத்தரவுன்படி தொல்லியல் துறை சார்பில் 3 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வரும் நிலையில் சீன நாட்டைச் சேர்ந்த பீங்கான் துண்டு, காசுகளை உருவாக்க அச்சு, சுடுமண்ணால் ஆன முத்திரை என பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
முதல் கட்ட அகழ்வாராய்ச்சி முதல் இதுவரை சோழர் கால அரண்மனையின் பல அடித்தளப் பகுதிகள் வெளிக்கொணரப்பட்டு , அக்காலகட்டத்தைச் சார்ந்த பல்வேறு அரும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சீன நாட்டைச் சார்ந்த உடைந்த பீங்கான் துண்டு ஒன்றும், காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு மற்றும் சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகளுக்கும், அன்றைய செலாவணியில் இருந்த பலவகையான காசுகளை உருவாக்கும் அக்க சாலைகள் அமையப்பெற்றிருந்தமைக்கும், அரசின் நடைமுறைகளில் பின்பற்றப்பட்ட அரச முத்திரைகள் குறித்தும் தெரிவிக்கும் தரவுகளாக இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள சீன பீங்கான் துண்டு 3 செமீ நீளமும் 2.5 சென்டிமீட்டர் விட்டமும் உள்ளது. தற்பொழுது அகழ்வாராய்ச்சி பணியானது 16 குழிகள் அமைக்கப்பட்டு 21 பணியாளர்கள் கொண்டு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 461 பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளது.