புகாரைபோக்குவரத்துத்துறை அங்கீகாரம் பெற்ற உணவகங்களின் முழுமையான பட்டியலை வெளியிடுங்கள்.- அறப்போர் இயக்கம்
புகார் எண் வெளியிட்டால் மட்டும் போதுமா? புகார்களை எப்படி கையாள வேண்டும் என்ற திட்டமிடல் வேண்டாமா? புகாரை கொடுத்து அது பதிவானதாக SMS வந்த அடுத்த சில நொடிகளில் புகாருக்கு தீர்வு காணப்பட்டதாக இன்னொரு SMS வருகிறது.
உடனே மீண்டும் புகார் எண்ணை அழைத்து இந்த விஷயத்தை சொன்னவுடன் அந்த SMS தவறுதலாக அனுப்பப்பட்டதாக சொல்லி மீண்டும் ஒரு புகார் எண் அனுப்பப்படுகிறது.
அந்த புகாரும் அடுத்த 40 நிமிடத்தில் தீர்வு காணப்பட்டதாக முடித்து வைக்கப்படுகிறது. பிறகு SETC அலுவலர் அழைத்து நீங்கள் புகார் கொடுத்த உணவகம் அரசாங்கத்தின் பேருந்துகள் நிறுத்தும் அங்கீகாரம் பெறவில்லை அதனால் உங்கள் புகாரை விசாரிக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.
அங்கீகாரம் பெறாத உணவகத்தில் அரசு பேருந்துகள் ஏன் நிறுத்தப்படுகிறது என்று கேட்டால் அது வேற டிபார்ட்மெண்ட் ஆட்களை கேட்க வேண்டும் என்று சொல்லி இணைப்பை துண்டித்து விடுகிறார். அமைச்சர் சிவசங்கர் அவர்களே, ஒரு நல்ல முயற்சியை துவங்கி இருக்கிறீர்கள். ஆனால் அது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருந்தால் யாருக்கும் பயன் இல்லை.
முதலில் போக்குவரத்துத்துறை அங்கீகாரம் பெற்ற உணவகங்களின் முழுமையான பட்டியலை வெளியிடுங்கள். மேலும் இந்த புகார் எண்ணை அனைத்து அரசு பேருந்துகளிலும் எழுத சொல்லுங்கள். தமிழக மின்சார வாரியம் மற்றும் சென்னை காவல்துறை போல டிவிட்டர் தளத்திலும் புகார்களை பெற்றுக் கொள்ள SETCக்கு ஒரு டிவிட்டர் கணக்கு துவங்குங்கள். அறப்போர் இயக்கம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு அறப்போர் இயக்கம் பதிவிட்டுள்ளது