வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா, “மாணவர்கள் ஒழுக்கமாக படித்து முன்னேற வேண்டும்” அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுரை
வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா, “மாணவர்கள் ஒழுக்கமாக படித்து முன்னேற வேண்டும்”அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுரை
கடலூர், மாவட்டம்
வடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா,விளையாட்டுவிழா, இலக்கியமன்ற விழா உள்ளிட்ட முப்பெரும்விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் சரளா வரவேற்றார்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்களை அமைச்சர் பன்னீர்செல்வம்,வழங்கிபேசியபோது,
தலைவர் ஸ்டாவின் தலைமையில் கழக ஆட்சி வந்த பிறகு வடலூரில் புதிய கல்லூரி உருவாக்கப்பட்டு அதில் 268 பேர் படிக்கிறார்கள் மேலும் இதிலும் மாணவிகள் அதிகமாக படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது பள்ளிகளும் ,தனியார் கல்லூரிகளும் மட்டுமே இருந்தன, இதில் கூடுதல் பணம் கட்டி படிக்க வேண்டிய சூழல் பெற்றோர்கள்
இறந்தார்கள், அதன் பின்பு அரசு மேல்நிலைப் பள்ளிகளையும் ,அதனைத் தொடர்ந்து அரசு கலைக்கல்லூரியையும். கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் கட்டப்பட வேண்டிய நிலையில் இருந்தவர்களுக்கு, பெரும் உதவியாக இருந்தது, வடலூர் அரசு கல்லூரியில் அதிக செலவில்லாமல் அரசு கல்லூரியில் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது, இந்த கல்லூரிக்கு கட்டடம் கட்ட இடம் கிடைக்காமல் தம்பிபேட்டை அருகே செல்லக்கூடிய சூழல் இருந்தது. , ரூ 13 கோடியே, 70 லட்சத்தில் புதிய கல்லூரி கட்டிடம் உருவாக உள்ளது, மாணவர்கள் இதனை பயன்படுத்தி படிக்க வேண்டிய காலத்தில் படிக்க வேண்டும்,படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும் ,நான் டாக்டராக நினைத்தேன் ஆனால் முடியவில்லை, பட்டம் படித்து விட்டு படிக்க வேண்டும், மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்,
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சுரேஷ்குமார்,
மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், கலா, விரிவுரையாளர் முனைவர் பழனி, வடலூர் நகரசெயலாளர்தமிழ்ச்செல்வன்,
முனைவர்கள் ஆறுமுகம், பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பேராசிரியர் மணிவண்ணன் நன்றி