தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனின் கொள்கையை பரப்ப தீர்மானம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் ஆணைக்கிணங்க, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளரும், கடலூர் மாமன்ற உறுப்பினரும், கடலூர் மாநகர அமைப்புக் குழுத் தலைவருமான பொறியாளர் கண்ணன் வழிகாட்டுதலுடன் வடலூர் வள்ளலார் ஞான சபை எதிரில் உள்ள “சென்னையார் சத்திரத்தில் ” வடலூர் நகர முக்கிய பொறுப்பாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
கூட்டத்தில் நகர தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு உறுப்பினர் செந்தில் முருகன் வரவேற்பு உரையாற்றினார்.
தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்
இராச.வெங்கடேசன், முருகேசன்,
சிவமூர்த்தி, பாவை சக்திவேல், செல்வசேகர் மூர்த்தி, தருமர் பூபாலன், ராஜா, சரத், ரவி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்
மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர்
வடலூர் சோ.குமரவேல் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில்
வடலூர் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கொள்கையினையும், அவர் முன்னெடுக்கின்ற போராட்டங்களையும் போராடி வெற்றி பெற்ற போராட்டங்களையும் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்தி கிளை நிர்வாகிகளை தேர்வு செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து கொடி கம்பம் இல்லாத வார்டில் புதிதாக கட்டைக்கட்டி கல்வெட்டுடன் கூடிய கொடி கம்பம் அமைத்து கொடிவேற்றுவதென தீர்மானிக்கப்பட்டது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கொள்கையினை ஏற்றும், அவரது போராட்ட குணத்தாலும் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் இணைந்து வரும் இச்சூழலில் வடலூர் நகரத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு வருவதற்கு தயாராக இருக்கக்கூடிய இளைஞர்களை இனம் கண்டு அவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைப்பதற்கான வேலை திட்டத்தில் பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.