ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா குவாகம் கிராமத்தில் மிகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தேர் மற்றும் திருவிழா இன்று 05 /05/2023ஆம் தேதி மாலை 16- 40pm மணிக்கு நல்ல நிலையில் தீமிதி மிதிக்கப்பட்டு தீமிதி முடிந்தவுடன் தேரோட்டம் அழகாக வீதி உலா ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டுள்ளதுமுன்னதாக இக்கோயில் ஏப்ரல் மாதம் 18-04-2023 ஆம் தேதி தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி கோவில் திருவிழா சுமார் 18,நாட்கள் மகாபாரதம் நாடகத்தை தொடர்ந்து இன்று 05/0 5/ 2023ஆம் தேதி அன்று வெள்ளிக்கிழமை தமிழ் மாதம் 22 சித்திரை தேதி தீமிதி மற்றும் தேர் திருவிழா நடைபெற்றது இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்து தீ மிதிக்கும் இடத்திற்கு வந்தடைந்தது பின்னர் பக்தர்கள் விரதம் இருந்து வந்த பூக்குழி இறங்கி பக்தர்கள் சங்கம் நேர்த்திக்கடனை செலுத்தினர் இந்த குவாகம் தேரோட்டம் ஆண்டிமடம் வட்டத்திற்கு உட்பட்டது இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் பக்தர்களின்திருவிழாவா இதற்கு முன் காலை அம்மனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளை செய்து அதனை தொடர்ந்து திரௌபதி அம்மன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபார்த்தனை காட்டப்பட்டு பின்னர் மாலை 4 மணி அளவில் மகாபாரதம் பாடப்பட்டு அம்மனை நல்ல நிலையில் திருத்தேருக்கு எழுந்தருளினார் தொடர்ந்து நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் தேரை திரளாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் தங்கள் வீட்டின் முன் அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர் பின்னர் தேரானது சுமார் 3.00 am மணிக்கு கோவிலை வந்தடைந்து முன்னதாக பக்தர்கள் பக்தி பரவசம் உடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த தேரோட்டத்தில் அக்கம் பக்கம் கிராமங்களில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம ஊர்களில் இருந்து பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் அதேபோல் சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து விதமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இத்திருவிழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.