“ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ராமானுஜர் அவதார உற்சவ தேரோட்டம்”
சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பாஷிய காரா சாமி (ராமானுஜர்) கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம்.சித்திரை மாத விழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும். இந்நிலையில் சித்திரை மாத பிரமோற்சவம் ஆதிகேசவ பெருமாளுக்கு கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது10 நாள் விழாவில் சிம்ம வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடந்த 29-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை ராமானுஜர் 1007-வது அவதார உற்சவத்தில் முக்கிய விழாவான திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீராமானுஜர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி சாமியை வழிபட்டபடி ஊர்வலமாக சென்றனர்