இரண்டு பாஜக எம் எல் ஏக்களுடன், மூத்த தலைவர்கள் ராஜினாமா,
கர்நாடகா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் தற்போது எம் எல் ஏவாக இருக்கும் 7 பேருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.
இதில் உள்ள இரண்டு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அனைத்து பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். பல மூத்த தலைவர்களும் தங்களுக்கு வாய்ப்பு வழங்காததால் சாரை சாரையாக கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர். இதை சமாளிக்க முடியாமல் முதல்வர் பொம்மை குழம்பி வருகிறார்.