கணவருடன் தகராறு; குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்?
ஜார்கண்ட் மாநிலம் லோகர்டகா மாவட்டத்தை சேர்ந்தவர் பூஜா மகதோ. இவர் தனது தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பூஜா மகதோ தனது குழந்ைதகளான கோமல் குமாரி (வயது 9), அனன்யா மகதோ (வயது 5), ஆர்யன் மகதோ ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் செராய்கேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்கு சென்றார். பின்னர் தற்கொலை செய்யும் முடிவுடன் அங்கிருந்த கிணற்றில், 3 குழந்தைகளுடன் குதித்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பூஜாமகதோவை மீட்டனர். அதற்குள் 3 குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்ட பூஜா மகதோ, கர்ஸ்வானில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.