10 மாத குழந்தையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட தாய்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள ஆலமரத்துப்பட்டி ஜக்கம்மாள் காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 47). கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலித்தொழிலாளியாக பாண்டியம்மாள் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய 3-வது மகள் சுபலட்சுமி (வயது 25). இவருக்கும், கன்னிச்சேரி குமாரபுரத்தை சேர்ந்த சமுத்திரக்கனி என்பவருடைய மகன் மகேஷ்குமாருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மகிஷா என்று பெயரிட்டனர். குழந்தை பிறந்த பின்னர் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் வழக்கம்போல் பாண்டியம்மாள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டில் மகள் மற்றும் பேத்தியை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள தகர செட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு சுபலட்சுமி மற்றும் 10 மாத பெண் குழந்தை மகிஷா இருவரும் தூங்கில் தொங்கியபடி கிடந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் டாக்டர் பரிசோதனை செய்தபோது, தாய்-குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial