பாஜக வளர்ச்சி மே மாதம் தான் தெரியும்; நடிகர் எஸ்.வி.சேகர்!
நடிகர் எஸ்.வி.சேகர் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும்போது, தனித்து நின்று ஓட்டு வங்கியை நிரூபித்து விட்டால், அதன்பின் பெரிய எதிர்காலம் இருக் கும். முதல் தேர்தலிலேயே கூட்டணிக்குள் சென்று விட்டால், தனித்த ஓட்டு வங்கியை கண்டுபிடிப்பது கஷ்டமான செயலாகிவிடும். அவர் விரும்புவதை தமிழக அரசியலில் செய்ய முடியுமா? என்பதையும் யோசிக்க வேண்டும். எம்ஜிஆர், சிவாஜி என்றெல்லாம் எடுக்கக்கூடாது. எம்ஜிஆர் பெரிய கட்சியிலிருந்து அதன் வளர்ச்சிக்கு உழைத்து, அங்கு கருத்து வேறுபாடு காரணமாக, வேறு கட்சி ஆரம்பித்தபோது, மக்கள் பெரிதாக ஏற்றுக்கொண்டு மாபெரும் கட்சியானது. ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும். அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ குறித்த கேள்விக்கு, “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலையின் பங்களிப்பு பூஜ்யமாகத்தான் இருக்கும். அவருடைய நடைப்பயணம் கேள்விக்குறியதாக தான் உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, அதிமுகவுடன் கூட்டணி இருக்கக்கூடாது என்றுதான் அண்ணாமலை வேலை செய்தார். அந்த வேலை நிறைவேறி விட்டது. அதன் பலன், இந்த தேர்தலில் தெரிந்து விடும். பாஜக 3 சதவீதம் ஓட்டு உள்ள கட்சி. பாஜக வளர்ச்சி மே மாதம் தான் தெரியும். அண்ணாமலை பாஜவுக்கு எதிராக செயல்படுகிறார் என்றே சொல்கிறேன். நாடாளுமன்றத்திலும், சட்டபேரவையிலும், நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பிரதிநிதி பிராமணர் இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு ஒரு பிரதிநிதி கூட இல்லாததால், அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.